Tamil Sanjikai

காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையை சேர்ந்த 40 கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து எல்லை பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் விமான படை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று அது முறியடிக்கப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி அந்நாட்டு ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் இன்று முதல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதேபோன்று பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment