Tamil Sanjikai

செம்மரம் வெட்ட சென்றதாக 13 தமிழர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஜத்தேபள்ளி வனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதிகளில் செம்மரங்கள் செழித்தோங்கி வளர்ந்துள்ளன. வெளிநாடுகளில் இந்த செம்மரங்களுக்கு அதிக மவுசு உள்ளது. இதனால் செம்மரங்களை வெட்டிக் கடத்தி வருகிறார்கள். செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர மாநில போலீசார் சிறப்பு காவல் படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் செம்மரம் கடத்த வந்ததாக வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக கூலி தொழிலாளர்களை செம்மர ஏஜெண்டுகள் ஏமாற்றி அழைத்து சென்று செம்மரம் வெட்டி கடத்த பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் நுழைய முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 13 பேரும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment