Tamil Sanjikai

இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியானதையடுத்து காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள சீன எல்லையில் படைகளை குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் என்ற பெயரில் நிபுணத்துவம் பெற்ற துணை ராணுவப்படையின் வடமேற்கு எல்லைப்புற பிரிவை லே பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளது.

இந்த பிரிவு வீரர்கள் தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் 960 கி.மீ. பயணித்து லேவுக்கு செல்ல உள்ளனர். மார்ச் மாதத்துக்குள் அங்கு சென்றடைந்து, ஏப்ரல் 1–ந்தேதி முதல் எல்லை பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக இந்த படையின் தலைமை இயக்குனர் தேஸ்வால் கூறினார்.

0 Comments

Write A Comment