தமிழகத்தில் மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல் மற்றும் விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது ஆனால் அதை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், 2020க்குள் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை கோரி மனு அளித்தும் பலன் இல்லை என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
தனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் எத்தனை மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன? என கேள்வி எழுப்பினர்.
எவ்வளவு மதுபானம், எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்படுகிறது? என்றும் எவ்வளவு மதுபானம் டாஸ்மாக்கிற்கு வினியோகம் செய்யப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
0 Comments