Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து, இப்போட்டி தொடரின்போது, அணி வீரர்களை எந்த வரிசையில் களமிறக்குவது, டாஸ் வென்றால் அணியின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர், விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் செய்தியாளர்களை இன்று (ஜூலை 29) கூட்டாக சந்தித்தனர். அப்போது ரோஹித் சர்மா விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, 'ஒரு மேட்சில் வெற்றி பெற, அணி வீரர்களின் அறையில் (டிரெசிங் ரூம்) சுமூகமான சூழல் நிலவ வேண்டியது அவசியம். எனக்கும், ரோஹித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக வந்த செய்தியில் சிறிதேனும் உண்மைஇருந்தால், நாங்கள் இருவருமே உலகக்கோப்பை தொடரில் சரியாகவே விளையாடியிருக்க முடியாது.

ஆனால், இருவருமே நன்றாகதான் விளையாடியுள்ளோம். இதிலிருந்தே அந்த செய்தி வெறும் வதந்தி என்பதை புரிந்து கொள்ளலாம். ரோஹித் சர்மாவுக்கும், எனக்கும் மனஸ்தாபம் எனச் சொல்லி வந்த செய்திகளை படித்தபோது உண்மையிலேயே எனக்கு சிரிப்புதான் வந்தது. எங்களுக்கிடையே எந்த பிரச்னையு்ம் இல்லை' என விராட் கோலி கூலாக பதிலளித்தார்.

0 Comments

Write A Comment