பேனர் விழுந்ததால், லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுபஸ்ரீ தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுபஸ்ரீ தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில், ‘சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க இனியும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் என் மகள் சுபஸ்ரீ உயிரிழந்தார். சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க விசாரிக்க வேண்டும். சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பேனர் விழுந்ததால் நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments