காஷ்மீர் பற்றிய அமெரிக்காவின் கொள்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
காஷ்மீர் பற்றிய எங்கள் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. காஷ்மீர் பிரச்சினை, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு விவகாரம். அவர்கள் நேரடி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பேச்சுவார்த்தை நடத்துவதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதே சமயத்தில் இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments