மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள பிரபல மகப்பேறு மருத்துவமனை ஒன்றிலும் வெள்ளம் சூழ்ந்து. அதில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கி மிகவும் பரிதவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடும் முயற்சிகள் மேற்கொண்டு, அங்கிருந்த 120 பச்சிளம் குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்களை பத்திரமாக மீட்டனர்.
தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, குழந்தைகளை மீட்ட வீரர்களுக்கு, அதன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
0 Comments