தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக, பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள புகாரில், தமிழகத்தில் 22-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருப்பதாக புகார்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையம் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகளை பெறுவதற்காக பணப்பட்டுவாடா மற்றும் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக, ஆளுங்கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதோடு, தேர்தல் ஆணையம் அவர்களை கண்காணிக்கவும் மறுப்பதாக திமுக புகாரில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் சட்டவிரோத செயல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதையே இது காட்டுவதாகவும் திமுக புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாநில உளவுப் பிரிவுக்குரிய போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுவதாகவும், அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீசார் இதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் திமுகவின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments