ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர்களின் கவனக்குறைவால் எச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹெச் ஐ வி தொற்று உள்ளதா என பிறந்து 45 நாட்களுக்குப் பின்பு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பாலிமெரேஸ் செயின் ரியேக்சன் எனும் பி.சி.ஆர். சோதனைக்கு அனுப்பப்பட்டது.
முதற்கட்டப் பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பரிசோதனை 6 மாதத்திலும், மூன்றாவது பரிசோதனை ஒன்றரை வயதிலும் எடுக்கப்படும் எனவும், இந்த மூன்று பரிசோதனைகளும் முடிந்த பின்பே ஹெச்.ஐ.வி. தொற்று முற்றிலும் இல்லை என உறுதி செய்ய முடியும் என தந்தை கூறியுள்ளார்.
0 Comments