நாகாலாந்தில் திருவிழாக்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹார்ன்பில் திருவிழாவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். இந்த ஆண்டு இந்த திருவிழாவின் 19வது ஆண்டு ஆகும்.
நாகாலாந்தில் தற்போதும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை சார்ந்தே வாழ்கின்றனர், அதனால் பெரும்பாலான அவர்களது திருவிழாவும் விவசாயத்தை சார்ந்ததாகவே உள்ளது. நாகா சமூகத்தினர் தங்கள் திருவிழாக்கள் அனைத்தையும் முகவும் புனிதமானதாக கருதுகிறார்கள், அதனால் அனைவரும் தவறாமல் கொண்டாடப்படும் அணைத்து திருவிழாக்களிலும் கட்டாயமாக பங்கேற்கிறார்கள்
இத்திருவிழா நாகா சமூகத்தின் தனித்தன்மையையும், பூர்வீக பாரம்பரிய செறிவை பாதுகாக்கவும், புத்துணர்வளிக்கவும் கொண்டாடப்படுகின்றது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரத்தில் நாகாலாந்தின் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய பூர்வீக திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழாவானது டிசம்பர் 10ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.
0 Comments