பழவேற்காடு ஏரியில் அனுமதியின்றி படகு சவாரியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.
பழவேற்காடு ஏரியில் இன்று (நேற்று) படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், பழவேற்காடு ஏரியில் அனுமதியின்றி படகு சவாரியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த மாவட்ட ஆட்சியர், விபத்தை ஏற்படுத்திய படகோட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments