Tamil Sanjikai

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான http://www.bjp.org ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து பாஜக தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இணையதள பக்கத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக காரணமாக இணையத்தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

சமூக வலைதளங்களில் பாஜக இணையதளம் முடக்கம் தொடர்புடைய தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. பாஜக இணையதளம் முடக்கப்பட்டதற்கு எந்த ஹேக்கர்கள் குழுக்களும் பொறுப்பேற்கவில்லை.

0 Comments

Write A Comment