Tamil Sanjikai

திருச்சி கோட்ட ரயில்வேயில், சோலார் முறையில் மின்சார உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

திருச்சி கோட்ட ரயில்வேயை நவீனமாக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கான பணியும் நடைபெறுகிறது, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள பிளாட்பாரங்களின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இதே போன்று 26 லெவல் கிராசிங்குகளில் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் திருச்சி கோட்டத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 640 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், மேலும் ஆண்டுக்கு ரூ 15 லட்சம் வரை மின் கட்டணம மிச்சமாகும் என்றும், இவையனைத்தும் வரும் மார்ச் மாதம் முதல் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment