மகாராஷ்டிராவில், தனது மகளின் திருமண செலவுக்காக தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டிய நபருக்கு இருமடங்கு மரங்கள் நட வேண்டும் என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின், தானே மாவட்டத்தில் உள்ள பத்லாப்பூரை சேர்ந்த தஷரத் குர்ஹடே(Dasharath Kurhade) என்பவர், தனது மகளின் திருமண செலவுக்காக அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தஷரத்திடம் விசாரணை நடத்தி, மரங்களை வெட்டிய இடத்தில் 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை போல இருமடங்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் மரங்களை நடவில்லை என்றால் புதிய மரங்களுக்கான தொகையை செலுத்த வேண்டும் என்றும் வனத்துறையினர் உத்தரவிட்டனர். இதுகுறித்து தஷரத்தின் சகோதரர் ஹர்சந்த் கூறுகையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் குடும்பத்தில் திருமணம் நடைபெறுவதாகவும், ஏழ்மை காரணமாக மரத்தை வெட்டியதாகவும் கூறினார்.
1 Comments
8 வழி சாலைகளுக்காக வெட்ட பட்ட மரங்களும் இருமடங்காக நடப்படுமா? மரங்களை யார் நடுவார்கள்?.