Tamil Sanjikai

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மூத்த காவலர் ஒருவர், நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் நீதிபதிகள். வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கான கார்களுக்கான நுழைவு அனுமதிக்கான பாஸை வழங்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி சந்தோஷ் குமார் யாதவ், சம்பந்தப்பட்ட காவலரை சீருடையை கழற்றிவிட்டு, நீதிமன்ற வளாகத்தில் அரைமணி நேரம் நிற்க வேண்டுமென தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான காவலர், விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இச்சம்பவத்தில் தொடர்புடைய நீதிபதி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ஆக்ரா காவல் துறை கண்காணிப்பாளர் அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

0 Comments

Write A Comment