2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை உள்ளது.
பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 திருவள்ளூர் தினம், ஜனவரி 17 உழவர் திருநாள், ஜனவரி 26 குடியரசுத் தினம், மார்ச் 25 தெலுங்கு வருடப் பிறப்பு, ஏப்ரல் 1 வணிக, கூட்டுறவு வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு. ஏப்ரல் 6 மஹாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 10 புனித வெள்ளி, ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், மே 1 மே தினம், மே 25 ரம்ஜான், ஆகஸ்ட் 1 பக்ரீத், ஆகஸ்ட் 11 கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 22 விநாயகர் சதுர்த்தி, ஆகஸ்ட் 30 மொகரம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 25 ஆயுதபூஜை, அக்டோபர் 26 விஜயதசமி, அக்டோபர் 30 மிலாது நபி, நவம்பர் 14 தீபாவளி, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் விடுமுறை என்று மொத்தம் 23 நாட்களுக்கு பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்திய தமிழக அரசு, விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
0 Comments