பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற காரை சினிமா பாணியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மடக்கினர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அந்த காரை துரத்தி சென்றனர், காரை நிறுத்த டயர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் காரில் கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
0 Comments