உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , சென்னையில் மே 12 -ஆம் தேதி பாடகி சின்மயி போராட்டம் நடத்த, காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் மே 12 -ஆம் போராட்டம் நடத்த சின்மயி காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். அவரது இந்தப் போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி அளிக்கப்படவில்லை. நீதித் துறை மீது தவறான பார்வையை ஏற்படுத்தும் என்பதாலும் இப்போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
0 Comments