தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
புனேயில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா 275 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ-ஆன் ஆனது.
இதனைத்தொடர்ந்து, ஃபாலோ ஆனில் விளையாடியா தென்னாபிரிக்கா இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த இழந்து தோல்வி அடைந்தது. இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 3, அஸ்வின் 2, இஷாந்த் சர்மா, ஷமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது..
0 Comments