நேற்று`பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் என்பதால், பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.
நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்; எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார். அப்போது அவரின் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.
பாஜகவை முழு மூச்சாக எதிர்க்க மாயாவதியுடன் கைகோர்த்து அவரது மகன் அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ், மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜா.கா வின் வெற்றி வாய்ப்புகளை பலப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.
0 Comments