நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்றால் மக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு. பேசிய மு.க.ஸ்டாலின், ஓசூர் தொகுதியை காலியானதாக முறைப்படி அறிவிக்க வேண்டும் என சபாநாயகரை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்தத் தொகுதியையும் சேர்த்து மொத்தமுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments