Tamil Sanjikai

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை எளிதில் வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மயங்க் அகர்வால் இந்த தொடரின் இரண்டாவது சாதத்தை அடித்தார்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே 145 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் விராட் கோலி 173 பந்துகளில் தனது 26 வது டெஸ்ட் சதத்தை அடித்தார். கேப்டனாக இது இவருடைய 19 வது டெஸ்ட் சதமாகும். இந்த ஆண்டில் கோலி அடித்த முதல் டெஸ்ட் சதம் இதுவாகும்.

உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 104 ரன்கள்(183 பந்துகள்), ரஹானே 58 ரன்களுடன்(161 பந்துகள்) களத்தில் உள்ளனர்.

கடைசியாக, மதியம் 2 மணிக்கு கிடைத்த தகவலின் படி இந்திய அணி 139 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்கள் எடுத்திருந்தது.

0 Comments

Write A Comment