ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி சாதமும், மகேந்திர சிங் தோனி அரை சாதமும் அடித்து அசத்தினார்.
அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி அந்த அணி சரிவில் இருந்து மீட்டர்.
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆட்டத்தால் தொடக்கம் சிறப்பானதாக இருந்தது. ஷிகார் தவான் 32 ரன்னிலும், ரோகித் சர்மா 43 ரன்னிலும் அவுட்டாக கேப்டன் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 39ஆவது சதத்தை பதிவு செய்தார்.
104 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழக்கவே தோனியும், தினேஷ் கார்த்திக்கும் ஆட்டம் இழக்காமல் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர், தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 14 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார் ,தோனி 54 பந்துகளில் 55 ரன்களை எடுத்து வழக்கம் போல் தன்னை ஒரு சிறந்த மேட்ச் பினிஷெர்(finisher ) என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார் .
இந்த வெற்றியின் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு1 என்ற கணக்கில் சமனாகி உள்ளது. இதனிடையே சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் 64 சதங்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
0 Comments