Tamil Sanjikai

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று, இன்று திடீரென இடிந்து விழுந்தது . உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment