Tamil Sanjikai

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் ஓய்வெடுக்குமாறும், பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும் மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவேன்’ என குமரி அனந்தன் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment