Tamil Sanjikai

மியான்மரில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, உள்நாட்டு வீரர் Nay டிவே ஓவை எதிர்கொண்டார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பங்கஜ் அத்வானி 6-2 என்ற கணக்கில் டிவே ஓவை சாய்த்து 22-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார்.

50 புள்ளி வரை கொண்ட குறுகிய வடிவிலான இந்த பில்லியர்ட்சில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அவர் 5 முறை பட்டத்தை ருசித்து இருக்கிறார். 34 வயதான அத்வானி பெங்களூரைச் சேர்ந்தவர் ஆவார்.

0 Comments

Write A Comment