Tamil Sanjikai

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார்.

அப்போது அவர் அங்குள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வழுக்கி விழுந்ததில் எஸ்.ஜானகிக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

0 Comments

Write A Comment