Tamil Sanjikai

சக்தி வாய்ந்த போர் தளவாடங்கள் அடங்கிய புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. மேலும், இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் நேரில் கண்காணித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சோதனை பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா நடத்தும் முதல் ஆயுத பரிசோதனை ஆகும்.

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில் சில பணிகள் நடப்பதாக செயற்கைகோள் படங்களில் தெரிய வந்ததாக தகவல் வெளியான நிலையில், புதிய சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. ஆனால், தென்கொரியா இந்த சோதனை தொடர்பாக எந்த ரேடார் தகவல்களையும் பெறவில்லை. எனவே, ஏவுகணை சோதனையாக இந்த சோதனை இருக்காது என்று நம்பப்படுகிறது.

0 Comments

Write A Comment