தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில், இடைதேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது, மேலும் இது தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் 18 எம்எல்ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் இது குறித்து ஜனவரி 4- ம் தேதி 18 எம்எல்ஏ.,க்கள், தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் செலவை வசூலித்து கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். மேலும் தேர்தல் செலவு வசூலிக்கும் வரை 18 தொகுதியில் தேர்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments