Tamil Sanjikai

லண்டன் மாநகரில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் விளையாட்டை கண்டு களித்துவிட்டு வெளியில் வந்த விஜய் மல்லையாவை அங்கிருந்த இந்திய வம்சாவழியினர் சூழ்ந்து நின்று விஜய் மல்லையா திருடன், "விஜய் மல்லையா திருடன் என்றும், திருடன் திருடன்" என்றும் கோஷமிட்டு கிண்டல் செய்துள்ளனர்.

இந்தியாவில் மதுபான உற்பத்தி மற்றும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வந்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மல்லையா. இவர் வங்கிகளிடம் பெற்ற கடன் தொகையை வங்கிகளுக்கு திரும்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று லண்டனில் குடிபுகுந்தார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து நீதிமன்றம் மற்றும் அந்நாட்டு அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டது. அதுதொடர்பான இறுதி முடிவு விரைவில் வெளிவர உள்ளது.

இந்நிலையில் லண்டனில் உலக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே நேற்று முன்தினம் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தை கண்டுகளிக்க விஜய் மல்லையா அவருடைய தாயாருடன் வந்திருந்தார்.

போட்டி நிறைவடைந்ததும். மைதானத்தை விட்டு வெளியில் வந்த மல்லையாவை நோக்கி இந்திய வம்சாவழியினர் சூழ்ந்து நின்று கொண்டு, விஜய் மல்லையா திருடன், விஜய் மல்லையா திருடன் என்றும் திருடன், திருடன் என்றும் கோஷமிட்டனர். அதை சற்றும் பொருட்படுத்தாது மல்லையா, அவருடைய தாயாரை கூட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

மேலும் மக்கள் எழுப்பிய கோஷங்கள் குறித்து அங்கிருந்த நிருபர்கள், மல்லையாவிடம் கருத்து கேட்டனர். "என்னுடைய தாயாரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். அதுவே என் நோக்கமாக இருந்தது" என்று பதிலளித்துள்ளார்.

0 Comments

Write A Comment