Tamil Sanjikai

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு அறிந்து இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீட் உள்ளதாகவும், மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பதாலும் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும் .தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படாது.

* நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும்

* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

* மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் - கல்வி மாநில பட்டியலில் சேர்க்கப்படும்.

* அரசு தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

* தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றி அமைக்கப்படும்; வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.

* ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்- டீசல் கொண்டு வரப்படும் என கூறப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment