Tamil Sanjikai

அமேசான் இணையதளத்தில் டாய்லெட் சீட் கவரில் கடவுள்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால், #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், ஆன்லைன் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏ டூ இசட் என அனைத்து பொருட்களும் ஆன்லைனில் கிடைப்பதால் மக்களும் ஆன்லைன் விற்பனையை பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த நிலையில், அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள டாய்லெட் சீட் கவர் மற்றும் டோர் மேட்களில், ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மத கடவுள்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவற்றை உடனடியாக இணையத்தில் இருந்து நீக்கும்படி நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதக் கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் தங்களது ஆன்லைன் ஸ்டோரில் பொருட்களை விற்பனை செய்ததால் நெட்டிசன்கள் கொதித்தெழுந்து, 'அமேசானில் பொருட்கள் வாங்காதீர்கள்' என்ற கோணத்தில் #BoycottAmazon என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

0 Comments

Write A Comment