Tamil Sanjikai

முதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தை அதன் பின் நடத்தலாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து ஐநாவுக்கான இந்தியா தூதர், அக்பருதீன் கூறியதாவது: "பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது. முதலில் அதை கைவிட்டால் நங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார். சிம்லா ஒப்பந்தம் ஒருபோதும் மீறப்படவில்லை. காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் தொடர்புடையது. இது இந்த இரு நாடுகள் மட்டுமே பேசி தீர்க்க வேண்டிய பிரச்னை'' என்றார்.

இதன் மூலம் ஐநாவில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய முயன்ற பாக்., மற்றும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

0 Comments

Write A Comment