மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்களான இந்தியா அணியை, வெஸ்ட் இண்டீசும் எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சார்பில் கெமார் ரோச் 3 விக்கெட்களும், அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷெல்டன் காட்ரெல் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.
இதைதொடர்ந்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 28 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 72, தோனி 56, ராகுல் 48 பாண்டியா 46 ரன்கள் சேர்த்தனர். உலக கோப்பை தொடரில், 5-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. உலககோப்பை தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.
0 Comments