ரிமா தாஸ் இயக்கத்தில் வெளியான அசாம் திரைப்படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், .2019 ஆண்டிற்கான இந்தியாவின் பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது.
கித்தார் வாங்கத் துடிக்கும் ஏழைச் சிறுமியின் கனவைப் பற்றிய படமான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், 4 பிரிவுகளில் தேசிய விருது வென்றது. பல்வேறு விருதுகளையும் குவித்த இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில், சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற வரிசையில் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
87 படங்களுடன் போட்டி போட்ட வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், முதல் 9 இடங்களைப் பெறத் தவறி, போட்டியில் இருந்து வெளியேறியது.
0 Comments