மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், மதுரை மாவட்டம் தோப்பூரில் 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்து, நிதி ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட கால கனவு திட்டம் என்று அவர் கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், இதற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
0 Comments