Tamil Sanjikai

கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் பயனாளர்களின் கணக்கு விவரங்களை பாதுகாப்பாக வைக்க தவறிய காரணத்தினாலும், வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்க தவறிய காரணத்தினாலும், விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருப்பதாலும் தனது சமூக வலைதள சேவையான கூகிள் பிளஸ் ஐ பொது மக்களுக்கு மூடப்போவதாகவும், என்டர்ப்ரைஸ் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை தொடர போவதாகவும் அறிவித்துள்ளது,

அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பின் பிரச்சார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பிறகு சமூகவலைதளங்களை கண்காணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளிலும் சமூகவலைதளங்களின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளுக்கு கடிவாளம் போடப்பட்டு வருகிறது.

இதனிடையே பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகளில் பெரியஅளவு பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 கோடி பேரின் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை சந்தித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என பேஸ்புக் நிறுவனம் கூறியது.

இந்தநிலையில், மற்றொரு சமூகவலைதளமான ‘கூகுள் பிளஸ்’ பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், அதனை சரியான முறையில் கண்டறிந்து தீர்வை தேடுவதற்கு அந்நிறுவனம் தவறி விட்டதாகவும் ‘வால்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டு இருந்தது.

சமூக வலைதள வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு மிகவும் குறைந்து விட்ட காரணத்தினாலும், தகவல் திருட்டு சர்ச்சையாலும் தனது கூகுளை பிளஸ் சேவையை தொடர்வதில்லையென்ற முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது .

0 Comments

Write A Comment