Tamil Sanjikai

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிக்க அந்த கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கடந்த 9-ந்தேதி டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்துக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஆனந்த் அதிகப்படியான வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டி.டி.வி.தினகரன் மற்றும் வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் மீது பறக்கும் படை அதிகாரி ரமேஷ்குமார் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

0 Comments

Write A Comment