ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரை தொடங்கியுள்ளதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது.
ஈராக் எல்லையோரப் பகுதியில் உள்ள குறுகிய இடத்தில் மட்டுமே முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் கடைசி நடவடிக்கையில் சிரிய ஜனநாயகப் படையினர் களமிறங்கி உள்ளனர். இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
குறிப்பிட்ட பகுதியில் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை தவிர்க்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை வேறிடங்களுக்கு நகர்த்தி வருவதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் இன்னும் சில வாரங்களுக்குள் முடிந்து விடும் என்று ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
0 Comments