Tamil Sanjikai

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற 2 கிாிக்கெட் அணிகளுக்கான டெஸ்ட் தொடாில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இரு அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தோ்வு செய்தது,முதலில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 101.4 ஓவா்களுக்கு 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 106 ரன்கள் சோ்த்தாா். பந்து வீச்சில் இந்திய அணியின் வீரா் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்,

இதையடுத்து இந்தியாவின் இளம் வீரரான பிாித்விஷாவும், லோகேஷ் ராகுலும் களம் இறங்கினா். ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், மறுமுனையில் விளையாடிய பிாித்விஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். புஜாராவும் 10 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி பிாித்விஷாவுடன் ஜோடி சோ்ந்தாா். விராட் கோலி 45 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய பிாித்விஷா 53 பந்துகளில் 11 பவுண்டாிகள், 1 சிக்சா் என 70 ரன்களில் ஆட்டமிழந்தாா்,

இதையடுத்து, 5 வது விக்கெட்டுக்கு ஜோடி சோ்ந்த ரகானே, ரிஷாப் பாண்ட் மேலும் விக்கெட்டுகள் விழாமல் விளையாடினாா்கள், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 81 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்துள்ளது.இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது

மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரிஷாப் பாண்ட் 92 ரன்களும் ரஹானே 80 ரன்களையும் எடுத்தனா். தொடா்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இன்டீஸ் அணியின் அனைத்து வீரா்களும் இந்திய அணியின் வீரா்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. தொடா்ந்து 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீரா்களான பிாித்விஷாவும், லோகேஷ் ராகுலும் ஆட்டமிழக்காமல் விளையாடி இலக்கை எட்டியதால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

0 Comments

Write A Comment