Tamil Sanjikai

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கணேசனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மேலும் 6 நாள் காவலை நீட்டித்து ஸ்ரீரங்கம் நீதிமன்றம் உத்தரவு.

கடந்த மாதம் 2ம் தேதி திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே லலிதா ஜீவல்லரி நகைக்கடையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயின. இந்த வழக்கில் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்த சுரேஷ் என்பவரை விசாரணை செய்ததில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணேசன் மதுரையில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். பின்னர் கைது செய்து கடந்த 14ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கணேசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ நகைகளையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும்,திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி கணேசனை 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 18ம் தேதி திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் பஞ்சாப் வங்கியில் தொடர்பு உள்ள கணேசனை 7 நாட்கள் போலிஸ் காவலில் எடுத்த விசாரித்து வந்த நிலையில் அதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசனின் மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில் புதைத்து வைத்திருந்த, லலிதா ஜூவல்லரி நகைகள் ஒன்றரை கிலோ, சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் ஒன்றரை கிலோ தங்கம் என 3 கிலோ தங்க நகைகளை, சமயபுரம் ஆய்வாளர் மதன் தலைமையிலான திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் மீட்டனர். இன்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் கணேஷனை இன்று ஸ்ரீரங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தினர்

இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் விசாரணை செய்ய 7 நாட்கள் அனுமதி வேண்டும் என ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி திருமதி சிவகாம சுந்தரி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணேசனை மேலும் 6 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அவர் வரும் 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment