இங்கிலாந்தில் செல்போன் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
லண்டன் அருகே உள்ள பெக்ஹாம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் செல்போன் கடையில் 3 கொள்ளையர்கள் புகுந்தனர். ஒருவனை வெளியில் காவலுக்கு நிற்க வைத்து விட்டு மற்ற இருவரும் கடைக்குள் புகுந்தனர். அப்போது கடையின் கதவை வேறு நபர்கள் திறந்ததால் அருகில் இருந்த காவல்நிலையத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்தனர்.
காவலர்களின் வாகனத்தைக் கண்டதும் ஓட்டம் பிடித்த கொள்ளையர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன.
0 Comments