வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி வட்ரா போட்டியிட தயார் என, அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதுவரை வேட்பாளர் எவரும் அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில், பிரியங்காவை களமிறக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்க, பிரியங்கா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். .
பிரியங்கா காந்தி இதற்கு சம்மதித்து விட்டாலும், அவர் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றும், ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
0 Comments