விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் .பி.எம்.நரேந்திர மோடி
பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு படத்தை வெளியிடுவதால் தேர்தல் விதி மீறல் என தடை விதிக்குமாறு காங்கிரஸ் கோரியிருந்தது. பட வெளியீடு தொடர்பான வழக்கில் மும்பை, டெல்லி உயர்நீதிமன்றங்கள் தலையிட மறுத்துவிட்டன.
வெள்ளிக்கிழமை வெளியாவதாக இருந்த நிலையில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் அறிவித்துள்ளார்.
முதற்கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கும் ஏப்ரல் 11-ம் தேதி திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இப்படத்தின் மீது தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் தேர்தல் ஆணையமும் ஆட்சேபணை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments