Tamil Sanjikai

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினராக உள்ளன.அதில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.

இந்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தனது ஆவணங்களை அளித்த பின் பேசிய வால்டர் ஜெ லிண்டனர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஜி4 நாடுகள் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இன்னும் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறவில்லை என்றார். இது தொடரக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், ஐ.நா. அமைப்பின் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் என்று தெரிவித்தார்.

0 Comments

Write A Comment