ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் எழுப்பியுள்ளது.
காஷ்மீர் பிரச்னை குறித்து ஐநா சபை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில், சீனாவும் இதே கருத்தை வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.
காஷ்மீர் விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்நாட்டு விவகாரம் என ஏற்கனவே மத்திய அரசு விளக்கம் அளித்த பிறகும் பாகிஸ்தான் , சீனா ஆகிய நாடுகள் இந்த விஷயத்தில் ஐநா தலையிட வேண்டும் என கூறி வருகின்றன.
0 Comments