ரஷ்யாவில், அச்சின்ஸ்க் ((Achinsk)) என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை சீண்டிய பெண்ணின் கையை பழுப்புக் கரடி கடித்து துண்டித்தது.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு பணியிலிருந்த 53 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பழுப்புக் கரடியைச் சீண்டினார்.
அதுவரை பொறுமை காத்து வந்த அந்தக் கரடி ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து திடீரென அந்தப் பெண்ணிக் கையைக் கடித்து துண்டாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments