Tamil Sanjikai

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தமுள்ள 40 இடங்களில் தற்போது வரை ஆளும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 21 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த சக்மா, தைசாவ்ங் தொகுதியில் வென்று அம்மாநிலத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சியின் நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வென்ற மிசோரம் தேசிய முன்னணி தற்போது, ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்களை நெருங்கி முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சைகள் 8 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர். மிசோரம் மாநில முதல்வர் லால் தான்ஹாவ்லா போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளார். மிசோரம் மாநில பாஜக தலைவர் லுனா டெபாசிட் இழந்துள்ளார். காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த பி.டி.சக்மா, தைசாவ்ங் தொகுதியில் வென்று மிசோரம் மாநிலத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

0 Comments

Write A Comment