நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாந தகவல் வெளியாகியுள்ளன..
குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார், மேலும் அத்துடன்,அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 2-ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
0 Comments